மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
புதுச்சேரி, ஆக.3-
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
புதுவை எம்.பி. வைத்திலிங்கத்தின் நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய அணைகள்
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட உத்தேசித்து வருகிறது. இந்த உத்தேசிக்கப்பட்ட அணை 67 டி.எம்.சி. கொள்ளளவு ஆகும். அவ்வாறு அமையும் பட்சத்தில் அது தமிழக மற்றும் புதுவை விவசாயிகளை பாதிக்கும்.
அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அணை கட்டுவதை தடுக்கவேண்டும். மேலும் கர்நாடக அரசானது தென்பெண்ணை ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதாக தெரிகிறது. தென்பெண்ணையாறு தமிழகம் வழியாக புதுச்சேரியில் கடலில் கலக்கிறது.
நிறுத்த வேண்டும்
புதுச்சேரியில் மட்டும் 4 ஆயிரத்து 778 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கர்நாடக அரசின் இந்த திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தை மீறிய செயலாகும். ஆகையால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அணை கட்டும் பணியினை நிறுத்தி, கட்டிய பகுதியை இடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
_____
Related Tags :
Next Story