கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 30 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 8 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்தனர்.

இதனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 612 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் 24 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,383 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 47 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பெங்களூரு நகரில் 290 பேர், சிக்கமகளூருவில் 36 பேர், தட்சிண கன்னடாவில் 219 போ, ஹாசனில் 91 பேர், குடகில் 83 பேர், மைசூருவில் 81 பேர், உடுப்பியில் 135 பேர், சிவமொக்காவில் 34 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பெங்களூரு நகரில் 5 பேர், தட்சிண கன்னடா, மைசூருவில் தலா 4 பேர், பெங்களூரு புறநகர், குடகு, துமகூரு, உத்தரகன்னடாவில் தலா 2 பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com