தீரன்சின்னமலை நினைவு நாள், ஆடி 18-ஐ முன்னிட்டு சங்ககிரி, மேட்டூரில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு
தீரன்சின்னமலை நினைவு நாள், ஆடி 18-ஐ முன்னிட்டு சங்ககிரி, மேட்டூரில் இன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன.
சேலம்:
சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவு இடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்படும். அதேபோல், ஆடி 18-ஐ முன்னிட்டு மேட்டூர் பகுதியில் நீர்தேக்க இடங்களுக்கும் அதிகளவில் மக்கள் கூடுவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மேட்டூர் பூங்கா மூடப்பட்டு நீர்நிலைகளில் மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்ககிரி மற்றும் மேட்டூர் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். சங்ககிரி தாலுகாவில் 9 மதுக்கடைகளும், மேட்டூர் தாலுகாவில் 13 மதுக்கடைகளும் என மொத்தம் 22 டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் மட்டும் திறக்கப்படாது என்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன்தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story