வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை பரிசோதனை
வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை பரிசோதனை
கோவை
கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு வாளையாறு சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதை கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு தமிழக- கேரளா எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.
இதன்காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
தீவிர கண்காணிப்பு
கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் நபர்களால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது.
இதற்காக தமிழக- கேரள மாநிலத்தின் எல்லைகளான வாளையாறு, முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில்
சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சான்றிதழ் அவசியம்
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்பதற் கான சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற் கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு சான்றிதழ்கள் இல்லாதபட்சத்தில் சோதனைச் சாவடிகளி லேயே கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப் படுவார்கள்.
ஒத்துழைப்பு
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story