லாரியில் செம்மண் கடத்திய 3 பேர் கைது


லாரியில் செம்மண் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 7:54 PM IST (Updated: 3 Aug 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

லாரியில் செம்மண் கடத்திய 3 பேர் கைது

துடியலூர் 

கோவையை அடுத்த துடியலூர் அருகே தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அனுமதி பெறாமல் மண் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. 

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் மண்டல துணை தாசில்தார் சரவணக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் லாரியில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக அருண்ராஜ், வெங்கடேஷ், லட்சுமணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story