ஊரடங்கு கட்டுப்பாடு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வெறிச்சோடிய ஒகேனக்கல்

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வெறிச்சோடிய ஒகேனக்கல்
Published on

பென்னாகரம்:

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆடிப்பெருக்கு விழா

தமிழகத்தில் காவிரி நுழைவிடமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடுவார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள காவிரி அம்மன் மற்றும் தேசநாதேஸ்வரர் கோவில்களில் தாலி கயிறை மாற்றி வழிபடுவது வழக்கம். மேலும் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதனால் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

தீவிர கண்காணிப்பு

மேலும் ஒகேனக்கல்லுக்கு செல்லும் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக அஞ்செட்டி சாலை, மடம் சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இதேபோன்று ஏரியூர், நாகமரை, நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com