ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேற்றம்:இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேற்றம்:இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Aug 2021 8:50 PM IST (Updated: 3 Aug 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேற்றம்:இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த பெண்கள் ஆக்கி கால்இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியப் பெண்கள் ஆக்கி அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story