அனுப்பர்பாளையம் அருகே டாஸ்மாக் பாரில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுப்பர்பாளையம் அருகே டாஸ்மாக் பாரில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுப்பர்பாளையம்:
அனுப்பர்பாளையம் அருகே டாஸ்மாக் பாரில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோதல்
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் 15 வேலம்பாளையம் ரோடு 25 முக்கு அருகே நீதிராஜன் என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்த பாருக்கு நேற்று முன்தினம் காலை சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (வயது 24), சுரேந்திரன் (28), சூர்யா (23), சிராஜூதீன் (27) ஆகியோர் மது குடிக்க அந்த பாருக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பார் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர். இதில் நீதிராஜன் காயம் அடைந்தார். உடனே பார் ஊழியர்கள் பிரபு, இளங்கோ, தினேஷ் ஆகியோர் சேர்ந்து நரேந்திரன், சுரேந்திரன், சூர்யா, சிராஜூதீன் ஆகியோரை தாக்கினார்கள். இதில் காயமடைந்த நீதிராஜன், நரேந்திரன், சுரேந்திரன், சூர்யா ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காலையில் நடந்த மோதலுக்கு பழி தீர்க்கும் வகையில் நரேந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் நண்பர்களான சாமுண்டிபுரத்தை சேர்ந்த பாலாஜி (24), செல்வக்குமார் (25), நவீன் (21), அருண்குமார் (24) உள்ளிட்ட 4 பேரும் பாருக்கு சென்று பாரில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பார் ஊழியர் தினேஷை கத்தியால் குத்தினார்கள். மேலும் மற்றொரு ஊழியர்களான பிரபு, இளங்கோ ஆகியோரை மதுபாட்டிலால் குத்தி உள்ளனர்.
8 பேர் கைது
இதில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திரன், சுரேந்திரன், சூர்யா, சிராஜூதீன், அருண்குமார், பாலாஜி, செல்வக்குமார், நவீன் உள்ளிட்ட 8 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். பார் உரிமையாளர் நீதிராஜன் மற்றும் ஊழியர்கள் தினேஷ், பிரபு, இளங்கோ உள்ளிட்ட 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story