கொரோனா பரவல் விதிமுறைகள் காரணமாக தாராபுரத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது.
கொரோனா பரவல் விதிமுறைகள் காரணமாக தாராபுரத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது.
குண்டடம்,
கொரோனா பரவல் விதிமுறைகள் காரணமாக
தாராபுரத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா
தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அன்றைய நாளில் புதிதாக தொழில் தொடங்குபவா்கள் தங்கள் தொழிலை ஆரப்பிப்பாா்கள். அதுபோன்று புதுமண தம்பதிகள் ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து புதிய தாலிமாற்றிக் கொள்வாா்கள்.
பலா் விவசாயம், தொழில், குடும்ப பிரச்சினைகள் தீர வீட்டில் முளைப்பாரி வளா்த்து ஆடி பெருக்கு நாளில் ஆறு அல்லது அருகில் உள்ள நீா்நிலைகளுக்கு எடுத்து செல்வாா்கள். அங்கு கரையோரம் வைத்து பூஜை செய்து அந்த முளைப்பாரிகளை அங்குள்ள தண்ணீாில் விடுவாா்கள்.
களை இழந்தது
பின்னா் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வாா்கள். இதனால் அவா்களின் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். இவ்வாறு வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக தாராபுரத்தில் களைஇழந்து காணப்பட்டது.
ஆடிப்பெருக்கு நாள் நெருங்கும் முன்பே குழந்தைகள், பொியவா்கள், திருமணமான புதிய தம்பதிகள் என அனைவருக்கும் புத்தாடை எடுத்து விடுவாா்கள். அதனை அணிந்து ஆடி பெருக்கு நாளில் தாராபுரம் அமராவதி ஆற்றுக்கு குடும்பத்துடன் வந்து பூஜைகள் செய்வாா்கள். தொடா்ந்து ஆற்றின் அருகில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வாா்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவலால் பலரும் வருமானமின்றி இருந்து வருகின்றனா்.
ஆற்றில் நீராட தடை
இதனால் தாராபுரத்தில் உள்ள ஜவுளிகடைகளில் கடந்த சில நாட்களாக குறைவான மக்களே புத்தாடைகள் வாங்கிசென்றனா். அதுபோன்று ஆடி பெருக்குநாளான நேற்று தாராபுரம் அமராவதி ஆற்றில் பொதுமக்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காலை முதல் மாலை வரைகுறைவான அளவு பொதுமக்களே முளைப்பாரி எடுத்து வந்து ஆற்றின் கரையில் வைத்துகுடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.
சில புதுமண தம்பதிகள் ஆற்றிற்கு வந்து புதிய தாலி மாற்றிக்கொண்டனா். ஆற்றின் கரையோரத்தில் இருந்த அகத்தீஸ்வரர் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனா். இருப்பினும் கோவிலின் வாசல் முன்பு நின்று வழிபட்டு சென்றனா். இதனால் தாராபுரத்தில் நேற்று ஆடிப்பெருக்குவிழா களையிழந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story