தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் செத்தது


தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் செத்தது
x
தினத்தந்தி 3 Aug 2021 9:31 PM IST (Updated: 3 Aug 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் செத்தது

அவினாசி, ஆக 4-
அவினாசி வட்டாரத்தில், சங்கமாங்குளம், ஆட்டைபாளையம் அருகே உள்ள தாமரைக்குளம், வேலாயுதம்பாளையம், நாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. அவினாசி பகுதியில் பருவமழை சரிவர இல்லாமல் அனைத்து குளம் குட்டைகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. இதனால் மான்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகவும் காட்டைவிட்டு கிராமப்புற சாலைகளில் மேய்ச்சலுக்காக வருகின்றன அவ்வாறு நேற்று 2 வயது மதிக்கதக்க பெண்மான் ஒன்று அவினாசியை அடுத்த நாதம்பாளையம் கூட்டுறவு வங்கி பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு சுற்றி திரிந்த தெருநாய்கள் மானை கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த மான் செத்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து செத்து கிடந்த மானின் உடலை மீட்டனர்.

Next Story