பேக்கரிக்கு சீல் வைப்பு
பேக்கரிக்கு சீல் வைப்பு
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முககவசம் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தலைமையில் சுகாதார அதிகாரி பிச்சை மற்றும் குழுவினர் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகம் பேர் கடையில் நின்றதை பார்த்து அந்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுபோல் மாநகர பகுதியில் விதிமீறல் தொடர்பாக 34 கடைகளுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரம் முழுவதும் இதுபோன்ற அபராத நடவடிக்கையில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story