தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சி மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலையின் நினைவு தினம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்றுகாலை கடைபிடிக்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் தலைமை தாங்கினார். விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறும்போது “ தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையம் கிராமத்தில் மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றாரர்.
விழாவில் தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த மோகன், வடக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், பழையகோட்டை ஊராட்சி கவுன்சிலர் எம்.செல்வம் ராமசாமி, நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் என்.செந்தில்குமார், தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் ஆயக்காடு எஸ்.செந்தில்குமார்,காயத்திரி பி.சின்னசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி, தாசில்தார் சிவகாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர
Related Tags :
Next Story