வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு


வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:18 PM IST (Updated: 3 Aug 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 40). இவர் புதுச்சேரியில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது பெற்றோர் மட்டும் எஸ்.புதூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 25-ந்தேதி ஊருக்கு வந்த பிரேம்குமார் தனது பெற்றோரை அழைத்து கொண்டு புதுச்சேரி சென்றார். அதன்பிறகு அவர் நேற்று காலை வீடு திரும்பி போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமி பீரோவை உடைத்து 4 பவுன் நகை, 300 கிராம் எடையுள்ள 2 வெள்ளி குத்துவிளக்கு, உண்டியலில் சேர்த்து வைத்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story