சூளகிரி அருகே இளம்பெண் தீக்குளிப்பு; காதலன் கைது
சூளகிரி அருகே இளம்பெண் தீக்குளித்த வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள ஒசஅள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 25). விவசாயி. இவர் 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்தநிலையில் திடீரென்று முனிராஜ் காதலை கைவிட்டார். இதுகுறித்து இளம்பெண் அவரிடம் கேட்டார். அப்போது முனிராஜ் அவரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story