திருப்பத்தூரில் கொரோனா விதிகளை பின்பற்றாத கடைக்கு ‘சீல்’


திருப்பத்தூரில் கொரோனா விதிகளை பின்பற்றாத கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 3 Aug 2021 10:35 PM IST (Updated: 3 Aug 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கொரோனா விதிகளை பின்பற்றாதல கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ஆகியோர் திடீரென கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள பாத்திர கடைக்கு வந்தனர். 

அப்போது அங்கு பொதுமக்கள் கொரோனா விதிகளை பின்பற்றாமலும், சமுக இடைவெளி இல்லாமலும் இருந்தனர். இதனையடுத்து கடையில் இருந்தவர்களை வெளியே அனுப்பினர். 

கடையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றாததால் கடைக்கு சீல் வைக்க தாசில்தார் சிவப்பிரகாசத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

அதைத் தொடர்ந்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story