தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சாயல்குடி
சாயல்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முனியசாமி, கணேசன், முருகவேல், பெருமாள், முனியசாமி, பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர், சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றி தருவதாக கூறியதன் பேரில் அவர்கள் பணிக்குச் சென்றனர்.
Related Tags :
Next Story