கிரிக்கெட் விளையாடியபோது தகராறு; 9 பேர் மீது வழக்கு


கிரிக்கெட் விளையாடியபோது தகராறு; 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2021 12:06 AM IST (Updated: 4 Aug 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் விளையாடியபோது தகராறு; 9 பேர் மீது வழக்கு

பனைக்குளம்
மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சாத்தக்கோன்வலசை அணியினரும், அண்ணா குடியிருப்பு அணியினரும் விளையாடினர். அப்போது இரு அணியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதில் கோபி கிருஷ்ணன் என்பவரை வினோத் என்பவர் பேட்டைக் கொண்டு தாக்கியதில் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில் வினோத்(வயது 20), முனீஸ்வரன், சரவணன், கார்த்திக் உள்பட 9 பேர் மீது மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story