வங்கி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


வங்கி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 4 Aug 2021 12:07 AM IST (Updated: 4 Aug 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாமல் பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

கீழக்கரை
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் சந்திரகலா உத்தரவின் பேரில் மண்டல வருவாய் அலுவலர் மன்சூர் தலைமையில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கீழக்கரையில் உள்ள அனைத்து வங்கிகளும் சோதனை செய்யப்பட்டன. அப்போது ஒரு வங்கியில் ஊழியர்கள் முககவசம் அணியாததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கீழக்கரை இந்து பஜார், முஸ்லிம் பஜார், பழைய தபால் நிலையம் சாலை, கடற்கரை சாலை, சீதக்காதி சாலை ஆகிய வீதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story