தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்

தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் போராட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சங்க விரோத போக்குடன் செயல் படுவதாக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ராஜீவ்காந்தி சிக்னல் அருகில் கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக தொழிலாளர் துறை அலுவலகம் நோக்கி வந்தனர்.

அப்போது அவர்களை தொழிலாளர் துறை அலுவலகம் அருகே தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தொழிலாளர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com