2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்துக்கு ஏலம்


2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 4 Aug 2021 12:51 AM IST (Updated: 4 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று 2 ஆயிரம் மூட்டைகள் பருத்தி ரூ.55 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாமக்கல்,

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று நடந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 899 முதல் ரூ.8 ஆயிரத்து 141 வரையிலும், டி.சி.எச்.ரக பருத்தி ரூ.7 ஆயிரத்து 900 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 199 முதல் ரூ.5 ஆயிரத்து 599 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி, எள் ஏலம் நடந்தது. பருத்தி பி.டி.ரகம்் ரூ.6 ஆயிரத்து 145 முதல் ரூ.7 ஆயிரத்து 777 வரையிலும், சுரபி ரகம் ரூ.7 ஆயிரத்து 889 முதல் ரூ.10 ஆயிரத்து 199 வரையிலும் 100 மூட்டைகள் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. சிவப்பு எள் ரூ.67.50 முதல் ரூ.96.50 வரையிலும், வெள்ளை எள் ரூ.76.10 முதல் ரூ.98.40 வரையிலும் 50 மூட்டைகள் ரூ.2 லட்சத்திற்கும் ஆக மொத்தம் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது.
1 More update

Next Story