ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து


ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
x
தினத்தந்தி 4 Aug 2021 12:58 AM IST (Updated: 4 Aug 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, ஆக.4-
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு இன்று (புதன்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
72-வது பிறந்தநாள் காணும் புதுச்சேரி மாநிலத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர், முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் பல்லாண்டு வாழ்ந்து புதுச்சேரி மக்களுக்காக பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story