புதுவை அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
புதுவை அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஆக.4-
புதுவை அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு குடிமைப்பணி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி மின்துறை சிறப்பு பணி அதிகாரி ராஜேஸ்வரி, உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் ஹிரண், உழவர்கரை நகராட்சி ஆணையர் சந்திரகுமரன், மாகி நகராட்சி ஆணையர் சுனில்குமார், மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா, மின்துறை சார்பு செயலாளர் கனி, காரைக்கால் நகராட்சி ஆணையர் காசிநாதன் ஆகியோர் பதவி உயர்வு பெறுகின்றனர்.
மேலும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அன்பழகன், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன், போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தி, காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் சுபாஷ், புதுவை நகர வளர்ச்சி குழும திட்ட இயக்குனர் கதிர்வேல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அசோகன் ஆகியோருக்கும் முன்தேதியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story