வாலிபர் கொலை வழக்கில் தந்தை கைது

அம்பையில் வாலிபர் கொலை வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் கொலை வழக்கில் தந்தை கைது
Published on

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை மேலப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருடைய மகன்கள் வினோத் (வயது 26), கார்த்திக் (23). இவர்கள் 3 பேரும் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில், கார்த்திக், வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வெள்ளத்துரையை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com