குமரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


குமரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2021 2:43 AM IST (Updated: 4 Aug 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்ததை கண்டித்து குமரியில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:
கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்ததை கண்டித்து குமரியில் பல்வேறு இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 1-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
நாகர்கோவிலில் நாகராஜா கோவில் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் தேவ் தலைமை தாங்கினார். மாநகர மண்டல தலைவர்கள் அஜித், நாகராஜன், சிவபிரசாத், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்து ராமன், பஞ்சாயத்து தலைவர் சிவகுமார், முன்னாள் நகர தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் ராஜா, சுனில்அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். 
முப்பந்தல்
தோவாளை ஒன்றிய பா.ஜனதா சார்பில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராம் தலைமை தாங்கினார். தோவாளை கிழக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய தலைவர் மகாதேவன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் உமாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், பா.ஜனதா நிர்வாகிகள் சொக்கலிங்கம், இசக்கிமுத்து, பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் மாலா, ஒன்றிய விவசாய அணி செயலாளர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். 
சுசீந்திரம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தலைவர் சுயம்புலிங்கம் வரவேற்று பேசினார். நகர தலைவர் சுடலைமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பத்மநாபன் சிறப்புரையாற்றினார். தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சுபாஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் தங்கபாமா மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் சுயம்பு நன்றி கூறினார்.
இதுபோல் பறக்கை மதுசூதனபெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், நட்டாலம் மகாதேவர் கோவில் உள்பட 10 இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story