கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 4 Aug 2021 3:00 AM IST (Updated: 4 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,507 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,182 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 64 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 3 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு திருமாந்துறையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 224 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றுவரை மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 44 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 725 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 26,860 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,410 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story