குமரியில் இன்று 25 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம்

குமரி மாவட்டத்தில் இன்று 25 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 25 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவேக்சின் தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) 25 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகர்கோவிலில் சால்வேசன் ஆர்மி பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.வி.டி.பள்ளி, வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி (மலையாளம் பள்ளி), பறக்கை சி.டி.எம்.புரம் அரசு பள்ளி, குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடக்கும் முகாமில் நேரடி டோக்கன் மூலம் அனைத்து வயதினருக்கும் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும் நாகர்கோவில் டதி பள்ளி, இந்து கல்லூரி, வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெறும் முகாமில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன்கள் வழங்கப்படும்.
அரசு ஆஸ்பத்திரிகள்
பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, குழித்துறை, கருங்கல், அருமனை, பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் நேரடி டோக்கன் மூலம் அனைத்து வயதினருக்கும் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story