லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப சாவு


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
x
தினத்தந்தி 4 Aug 2021 3:48 AM IST (Updated: 4 Aug 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுமாப்பிள்ளை
ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் சர்வேஷ் கிருஷ்ணன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சர்வேஷ் கிருஷ்ணனுக்கும், ஆத்தூர் அருகே உள்ள ராசி நகரை சேர்ந்த சூரியகலா என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
சாவு
இதனிடையே நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூருக்கு வந்துவிட்டு தாண்டவராயபுரம் வழியாக கீரிப்பட்டிக்கு சென்றிருந்தார். அப்போது தண்டவராயபுரம் மோட்டூர் பாலம் அருகே சென்ற போது சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரியின் முன்பக்கம் சர்வேஷ் கிருஷ்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் உடல் நசுங்கி சர்வேஷ் கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story