கொரோனா தடுப்பூசி முகாம்
போடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
போடி:
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் போடி டி.வி.கே.கே. நகர் மதினா பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைத்தார்.
முகாமில் 380 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. விழாவில் தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர்கள் முகமது பசீர், ராஜா ரமேஷ், நகரசபை முன்னாள் துணைத் தலைவர் சங்கர், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் அழகரசன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் முத்து முகமது, வினோத், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story