புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 8:47 PM IST (Updated: 4 Aug 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

கம்பம், போடி பகுதிகளில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்: 

கம்பம்மெட்டு காலனி பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் புகையிலை விற்பதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலை மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த சாபர்அலி (வயது 38) என்பவரது கடையில் 2 சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாபர் அலியை கைது செய்தனர். 


இதேபோல் போடி தாலுகா போலீசார் மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சுரேசை கைது செய்தனர்.

Next Story