கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 4 Aug 2021 9:48 PM IST (Updated: 4 Aug 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்

உடுமலை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசுவலியுறுத்தி வருகிறது. இதற்காக பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே வாக்குச்சாவடிகளில் (பள்ளிகள்) கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று  உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் கச்சேரி வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.இதில் 210பேருக்கு கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசியும், 100பேருக்கு கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது.பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர்.

Next Story