பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2021 10:01 PM IST (Updated: 4 Aug 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி:
இந்து முன்னணி சார்பில் பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். 
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் கொரோனா பரவலை காரணம் காட்டி இந்து வழிபாட்டு தலங்களை மட்டும் மூடுவது கண்டனத்துக்கு உரியது என்றும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் பலர் கலந்துகொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தையொட்டி பழனி கோவில் அலுவலகம் முன்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
1 More update

Next Story