திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அங்கீகார சான்று வழங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அங்கீகார சான்று வழங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அங்கீகார சான்று வழங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
கட்டிட பணிகள்
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இதனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்டி இதற்கான அனுமதி வழங்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியாக அமைக்கப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகள் நடந்து வருகிறது. 11.28 ஏக்கர் பரப்பளவில், ரூ.336 கோடிக்கு இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தேசிய மருத்துவ குழு ஆய்வு
தமிழகத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் திருப்பூரும் ஒன்று. இதற்கிடையே மருத்துவக்கல்லூரிக்கான கட்டிட பணிகள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகார சான்றிதழ் வழங்குவது தொடர்பாகவும் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த குழுவினர் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று ஆய்வு செய்தனர். ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர்கள் 2 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இதுபோல் மருத்துவக்கல்லூரி, குடியிருப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மருத்துவ கட்டிடங்கள் கோட்டம்) தவமணி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story