தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மறைமலை அடிகளாரின் பேரனுக்கு பணி நிரந்தரம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மறைமலை அடிகளாரின் பேரனுக்கு பணி நிரந்தரம் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் இளைய மகன் மறை பச்சையப்பன், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதையும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புக்கு பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகையை செலுத்த இயலாத நிலையில் உள்ளதையும் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறை பச்சையப்பன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டண நிலுவைத்தொகையை தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து ஆணையிட்டுள்ளார்.
மறை பச்சையப்பனின் மகன் சிவக்குமார் தற்போது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதை அறிந்த முதல்-அமைச்சர், சிறப்பு நேர்வாக அவரது பணியினை நிரந்தரம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story