கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.
கோவை,
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல் கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை, கொரோனாவால் பெற்றோர்களை இழந்து உறவினர் ஆதரவில் வளரும் குழந்தை பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை மற்றும் இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று தவிக்கும் 5 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று வழங்கினார். அப்போது குழந்தைகள் நல அலுவலர் சுந்தரம் உள்ளிட்டோர் இருந்தனர்.
Related Tags :
Next Story






