2 விற்பனையாளர்களுக்கு அபராதம்


2 விற்பனையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 Aug 2021 8:39 PM GMT (Updated: 4 Aug 2021 8:39 PM GMT)

ரேஷன்கடையில் இருப்பு குறைபாடு காரணமாக 2 விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து அரிசிகடத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து   மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வப்போது ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்து இருப்பு விவரங்களை சரி பார்த்து வந்தனர். இந்த நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் நேற்று காலை சிவகாசி நேருஜிநகர், ரிசர்வ் லைன் ஆகிய இடங்களில் உள்ள 2 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது 2 கடைகளிலும் இருப்பு குறைபாடு இருப்பது கண் டறியப்பட்டது. இதை தொடர்ந்து நேருஜிநகர் ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.750-ம், ரிசர்வ்லைன் ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.500 அபராதம் விதித்தார். இந்த ஆய்வின் போது சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியன் உடன் இருந்தார்.

Next Story