வெடி உப்பு பதுக்கி வைத்திருந்தவர் கைது

x
தினத்தந்தி 5 Aug 2021 2:13 AM IST (Updated: 5 Aug 2021 2:13 AM IST)
சிவகாசியில் வெடி உப்பு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சிவகாமிபுரம் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் (வயது 51) என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி உப்பு மூடைகளை அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தலா 50 கிலோ எடை கொண்ட 58 வெடி உப்பு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து மகாராஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





