மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
காரியாபட்டி அருகே மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆவியூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புல்லூர் கண்மாய் பகுதியில் 2 டிராக்டர்களில் பொக்லைன் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். மணல் அள்ளி கொண்டிருந்ததை கண்ட போலீசார் மணல் அள்ளும் இடத்திற்கு சென்றபோது அங்கிருந்து ஒரு சிலர் தப்பி ஓடி விட்டனர். 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெள்ளாங்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி (வயது 24), தொடுவம்படி கிராமத்தை சேர்ந்த அய்யனார் (35) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், மாரிச்சாமி, அய்யனார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story