அரசு பஸ் டிரைவர் சாவு


அரசு பஸ் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 5 Aug 2021 2:29 AM IST (Updated: 5 Aug 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் டிரைவர் திடீரென உயிரிழந்தார்

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி 14-வது வார்டு புதுத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். விஜயகுமார் நேற்று முன்தினம் மதியம் பணி முடித்து விட்டு அங்கேயே தூங்கி விட்டு பணிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் பெரம்பலூரில் இருந்து வி.களத்தூர் பிள்ளையார்பாளையம் வழியாக வேப்பந்தட்டைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை இயக்கி கொண்டு பணிமனையை விட்டு புறப்பட்டார். அப்போது விஜயகுமாருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சக போக்குவரத்து பணியாளர்கள் விஜயகுமாரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த விஜயகுமாருக்கு தீபா என்கிற மனைவியும் ஸ்ரீமுகி (6) என்ற மகளும் ஹரிதாஸ் (4) என்ற மகனும் உள்ளனர்.


Next Story