வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது


வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 2:42 AM IST (Updated: 5 Aug 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர்-சிறுநிலா இடையே வனப்பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி குகனேசன் உத்தரவின்பேரில் வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன் வனவர்கள் பாண்டியன் சுப்பிரமணியன் மற்றும் வனக் காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 15 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 3 முயல்கள்  வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story