கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூரில் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விதிகள் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி, பாலக்கரை ரவுண்டானா வழியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி ஹெல்மெட் அணியுமாறு அறிவுறுத்தினார். இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் என்று கூறிய அவர், சாலை விதிமுறை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் அவர் வாகன ஓட்டிகளுக்கும் பஸ் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். நிகழ்ச்சயில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story