கொரோனா ஒழிப்பு உறுதிமொழி
கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கொரோனா 3-வது அலை பரவலை ஒழிக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெங்கடேசபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடந்தது.இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜாமுகமது முன்னிலை வகித்தார். இதில் மருத்துவ நிபுணர்கள் டாக்டர்கள் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவஅலுவலர் அன்பரசு உள்பட இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் செவிலியர்கள் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்பு கொரோனா விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Tags :
Next Story