கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை


கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 5 Aug 2021 3:11 AM IST (Updated: 5 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,769 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 11 ஆயிரத்து 727 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 30 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 680 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 1,714 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 28 லட்சத்து 50 ஆயிரத்து 717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 24 ஆயிரத்து 305 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

பெங்களூரு நகரில் 411 பேர், தட்சிண கன்னடாவில் 350 பேர், மைசூருவில் 143 பேர் உள்பட 28 மாவட்டங்களில் 1,769 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஹாவேரி, யாதகிரியில் கொரோனா பாதிப்பு இல்லை. 
பெங்களூரு, மைசூருவில் தலா 4 பேர், தட்சிண கன்னடாவில் 6 பேர் உள்பட 14 மாவட்டங்களில் 30 பேர் இறந்தனர். 16 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. 
1 More update

Next Story