சேலம் மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 4:27 AM IST (Updated: 5 Aug 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 75 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 83 பேருக்கு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20 பேர், மகுடஞ்சாவடியில் 5 பேர், சங்ககிரியில் 10 பேர், ஓமலூரில் 9 பேர், மேச்சேரி, வீரபாண்டியில் தலா 3 பேர், தாரமங்கலம், ஆத்தூர், வாழப்பாடியில் தலா 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 83 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். இவர்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 131 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 955 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,568 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story