கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை


கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை
x
தினத்தந்தி 5 Aug 2021 4:28 PM IST (Updated: 5 Aug 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை கி.வீரமணி அறிக்கை.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவும், கருணாநிதி படத்திறப்பு விழாவும் நடந்துள்ளது. இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த விழாவில் முக்கிய எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை மட்டுமல்ல, ஜனநாயக வரலாற்றில் அக்கட்சி தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அழிபட முடியாத கறையுமாகும்.

100 நாள்கள் கூட ஆகாத ஓர் ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்துவது எவ்வளவு விசித்திரம். எதிர்க்கட்சியாக செயல்படுங்கள் - எதிரிக்கட்சியாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது. கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையான தி.மு.க. ஆட்சியை நோக்கி இப்படி கல்லெறிவதால் ஏற்படும் இழுக்கு எதிர்க்கட்சி அ.தி.மு.க.வுக்குத்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story