கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14.63 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.


கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14.63 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
x
தினத்தந்தி 5 Aug 2021 4:14 PM GMT (Updated: 5 Aug 2021 4:14 PM GMT)

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14.63 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே அழகேஸ்வர சாமி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14.63 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
14.63 ஏக்கர் நிலம் 
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இலக்கமநாயக்கன்பட்டியில் அழகேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 14.63 ஏக்கர் நிலம் வெள்ளகோவில் - தாராபுரம் ரோட்டில் ஆண்டிபாளையம் பிரிவில் உள்ளது. இந்த நிலம் இலக்கமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேருடைய ஆக்கிரமிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தை மீட்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ஆக்கிரமிப்பாளர்கள், கோவில் நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இதுவரை நிலத்தை ஒப்படைக்க வில்லை. இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்கும் படி அறிவுறுத்தினர்.
நிலத்தை கைப்பற்றினர்
அதன்படி நேற்று திருப்பூர் உதவி ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் காங்கேயம் சரக ஆய்வர் அபிநயா, செயல் அலுவலர்கள் தேவிப்பிரியா, ரத்தினாம்பாள், செந்தில், சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலையில் கோவிலுக்கு சொந்தமான  ரூ.70 லட்சம் மதிப்பிலான 14.63 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
கோவில் நிலத்தை மீட்கும் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். உடன் வெள்ளகோவில் நில வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, நில அளவையர் சுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

Next Story