பல்லடம் அருகே மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் காரை ஏற்றியதால் கால்கள் துண்டான வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பல்லடம் அருகே மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் காரை ஏற்றியதால் கால்கள் துண்டான வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் காரை ஏற்றியதால் கால்கள் துண்டான வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இருதரப்பினர் மோதல்
பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு கடந்த 2-ந்தேதி பல்லடம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 24), கனகராஜ் (35), சக்திவேல் (25), சரவணக்குமார் (27), மகேஷ் (25) மற்றும் நிக்கி (22) ஆகியோர் சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர். அப்போது அங்கு ராயர்பாளையத்தை சேர்ந்த பிரபு (27), மணிகண்டன் (27), கர்ணன் (28) மற்றும் கதிர் ஆகியோரும் வந்தனர். இவர்களும் மது வாங்கி குடித்தனர்.
இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் போதை அதிகமானதும் அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று அமர்ந்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களிடம் புகையிலை கேட்டுள்ளனர். இதில் புகையிலை தரமறுத்ததால் 2 தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து 2 பிரிவினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பை சேர்ந்தவர்களும் காயம் அடைந்தனர்.
சாவு
இதில் ஆத்திரம் அடைந்த ராயர்பாளையம் தரப்பை சேர்ந்த பிரபு என்பவர் தனது காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று கவுண்டம்பாளையம் தரப்பை சேர்ந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் சங்கரலிங்கத்திற்கு கால் துண்டானது. இதனால் அந்த இடமே போர்க்களமானது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சங்கரலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் தனித்தனியாக பல்லடம் போலீசில் புகார் செய்தனர். கவுண்டம்பாளையம் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயர்பாளையத்தை சேர்ந்த பிரபு, மணிகண்டன், கர்ணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிரை தேடி வருகிறார்கள்.
அதுபோல் ராயர்பாளையம் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் தரப்பை சேர்ந்த கனகராஜ், சக்திவேல், சரவணக்குமார், மகேஷ், நிக்கி ஆகியோரை கைது செய்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
இதற்கிடையில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சங்கரலிங்கம் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரலிங்கம் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பிரபுவை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story