கோவில்களில் இணை ஆணையர் ஆய்வு


கோவில்களில் இணை ஆணையர் ஆய்வு
x

கம்பத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் ஆய்வு செய்தார்.

கம்பம்: 


கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழு, சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணியசாமி கோவில், கம்பராயப்பெருமாள் கோவில்களில் இந்துசமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து கம்பராயப்பெருமாள் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


கூட்டத்தில் சுருளிவேலப்பர் கோவில், கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். கோவில் வளாகத்தில் அன்னதான மண்டபம், 2 ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சுகாதார வளாகம் கட்ட வேண்டும். கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வரும் வகையில் இணைப்பு பாதை அமைக்க வேண்டும். 

திருப்பணிக்குழு அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். முடிவில், பா.ஜ.க. சார்பில் தேர் திருவிழா நடத்தவேண்டும் என மனு அளிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி குடியிருப்போர் சங்க தலைவர் சுருளி கொடுத்த மனுவில், வாடகையை குறைக்க வேண்டும், குடியிருப்போர் பெயரில் ரசீது வழங்க வேண்டும், மராமத்து பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த ஆய்வில், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் போத்தி செல்வி, தி.மு.க. நகரச்செயலாளர்கள் வக்கீல் துரை நெப்போலியன் (வடக்கு), சூர்யா செல்வக்குமார் (தெற்கு), கிராம கமிட்டி உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story