திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
தினத்தந்தி 5 Aug 2021 9:50 PM IST (Updated: 5 Aug 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். 
97 பேருக்கு கொரோனா 
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஒரு சில மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வந்த நிலையில் மேலும் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
5 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 261-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 535-ஆக உள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 852-ஆக உயர்ந்துள்ளது. 

Next Story