உடுமலை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
உடுமலை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
உடுமலை:
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அத்துடன் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 8-ந்தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில்உடுமலை மத்திய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், வாரச்சந்தை பகுதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் நேற்று கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் க.கவுரிசரவணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், எம்.மாரியப்பன்,ஏ.ராஜ்மோகன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story