பொள்ளாச்சியில் மாட்டு சந்தை நடத்த தடை கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிப்பு
பொள்ளாச்சியில் மாட்டு சந்தை நடத்த தடை விதிக்கப்பட்ட தால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மாட்டு சந்தை நடத்த தடை விதிக்கப்பட்ட தால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சந்தை நடத்த தடை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த புகழ்பெற்ற சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்டு சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
ஏமாற்றத்துடன் திரும்பினர்
இதன் காரணமாக சந்தை நடைபெறவில்லை. தடை உத்தரவு தெரியாமல் சில வியாபாரிகள் சந்தைக்கு மாடுகளை வாங்குவதற்கு வந்தனர். ஆனால் சந்தை நடைபெறாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் பரபரப்பாக காணப்படும் சந்தை நடக்கும் பகுதி மாடுகள், வியாபாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வர்த்தகம் பாதிப்பு
சந்தை நடத்த தடை குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியானது. இதனால் கடந்த 3-ந் தேதி நடந்த சந்தைக்கு ஏராளமான வியாபாரிகள் வந்து அதிகளவில் மாடுகளை வாங்கி சென்றனர். அன்று ஒருநாளில் மட்டும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப் பட்டு உள்ளது. எனவே சந்தை எப்போது தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story